புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (27) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
3 months ago
புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (27) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வு இன்றையதினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.