ஜேர்மனியைச் சேர்ந்த ருடிகர் கோச் என்ற நபர் 120 நாள்கள் நீருக்கடியில் வாழ்ந்து உலக சாதனை

2 months ago



ஜேர்மனியைச் சேர்ந்த ருடிகர் கோச் என்ற நபர், 120 நாள்கள் நீருக்கடியில் வாழ்ந்து, நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

59 வயதான குறித்த நபர், பனாமா கடலுக்குள் 30 சதுர மீட்டர் கொண்ட காப்ஸ்யூல் பாணியில் உருவாக்கப்பட்ட வீட்டில் கடந்த 120 நாள்களாக வசித்து வந்துள்ளார்.

முன்னதாக, புளோரிடா குளத்தில் நீருக்கடியில் பல்கலைக்கழக பேராசிரியரான ஜோசப் டிதுரி என்பவர் 100 நாள்கள் தங்கியிருந்தார்.

அந்த சாதனையை முறியடித்து நடிகர் கோச் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்