தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன்

4 weeks ago



ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய 4 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனங்களுக்கான பெயர்கள்    தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்                மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் மொஹமட் இஸ்மாயில் முத்து மொஹமட் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற      நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப் பட்டியல் உறுப்பினராக இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தார்.