டொராண்டோவில் கனடா - அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு இன்று இடம்பெறுகின்றது

2 months ago



டொராண்டோவில் கனடா - அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு இன்று இடம்பெறுகின்றது.

இந்த மாநாட்டின் போது, கனேடிய வர்த்தகம் மற்றும் வணிகத் தலைவர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களுடன் இணைந்து, பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான உத்திகள், உள்நாட்டு வர்த்தக தடைகளை உடைத்தல் மற்றும் ஏற்றுமதியைப் பன்முகப்படுத்துதல் பற்றி கவனம் செலுத்தப்படும் என்று கனேடிய பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

இருதரப்பு உறவுகள் மற்றும் ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல் குறித்து ட்ரூடோவுக்கு ஆலோசனை வழங்கும் கனடா அமெரிக்க உறவுகள் கவுன்சிலின் உறுப்பினர்களும் இதில் இடம்பெறுவார்கள்.

இந்த உச்சிமாநாட்டில் வணிகத் தலைவர்கள், தொழில்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற் சங்கத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கனேடிய பிரதமர் அலுவலகம் இதில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை.

மேலும், இந்த உச்சிமாநாடு, அமெரிக்கா சார்ந்த பொருளாதாரத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையை குறைத்து, கனடாவுக்கென தனி வளர்ச்சிப் பாதை உருவாக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.

அண்மைய பதிவுகள்