
கனடிய தபால் நிறுவனம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்கத் தீர்மானித்துள்ளது.
தற்காலிக அடிப்படையில் அவர்கள் இவ்வாறு பணி நீக்கப்பட உள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக கனடிய தபால் நிறுவன பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 55,000 பணியாளர்கள் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படுவதாக கனடிய தபால் நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் பணிகள் முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன எனவும் இதனால் பணியாளர்கள் பணி நீக்கப்படுகின்றனர் எனவும் அது அறிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த பணி நீக்கத் தீர்மானம் எவ்வாறானது என்பது பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
