பெண் வேட்பாளர்களான கருணாநிதி யசோதினி, சசிகலா ரவிராஜ் ஆகியோர், யாழ். வணிகர் கழகத்தின் தலைவரை சந்தித்தனர்

2 months ago



ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வன்னி மாவட்ட முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண மாவட்ட பெண் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகியோர், யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரத்துடன்   கலந்துரையாடினர்.

இதன் போது எதிர்வரும் தேர்தலில் பெண் வேட்பாளரின் முக்கியத் துவம், பெண்களை அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் மற்றும் பெண்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் எஸ்.ஈஸ்வரன், தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம், முன்னாள் போராளிகள், யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

அண்மைய பதிவுகள்