இந்த நாட்டில் இன்னமும் இனவாதம் இருக்கின்றது. அதனால் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம்.-- மனோகணேசன் தெரிவிப்பு

2 months ago



இந்த நாட்டில் இன்னமும் இனவாதம் இருக்கின்றது. அதனால் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை தமிழ் பேசும் மக்கள் உணரவேண்டும்.

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்              மனோகணேசன் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

ஜனாதிபதி அநுரவின் வெற்றியை இந்த நாட்டில் கௌதம புத்தர் திடீரென மேலிருந்து இறங்கி வந்தது போல தோற்றப் பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர்            முற்படுகின்றனர்.

ஆனால் இந்த நாட்டில் இனவாதம் இன்னும் உள்ளது. எனவே, எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம்.

எமக்கான பிரதிநிதித்துவத்தையும் அநுரவின் கைகளுக்கு வழங்கிவிட முடியாது. அவ்வாறு வழங்க முற்பட்டால் அது ஆபத்தாகும்.

நல்லாட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்புப் பணி இறுதிப்படுத்தப்படும் என       ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அந்த நடவடிக்கை அமைந்தால் நிச்சயம்               வரவேற்போம்.

நாங்கள் சிங்கள - பௌத்தர்கள்    அல்லாதவர்கள் என்பதால்தான் ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு வரமுடியாதுள்ளது.

சட்டம் அதற்குத் தடையாக இல்லை.

இவ்வாறான சூழ்நிலையில் எமது பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை தமிழ் பேசும் மக்கள் உணரவேண்டும்.

அநுர இன்று கூறும் விடயங்களையெல்லாம். நாம் 10 வருடங்களுக்கு முன்னரே கூறி விட்டோம் - என்றார்.

அண்மைய பதிவுகள்