த.வெ.க. மாநாட்டில் ஒருவர் உயிரிழப்பு; 90 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!
விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு நேற்று மாலை இடம்பெற்றது.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற அந்த மாநாட்டுக்கு அதிகளவானோர் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில், மாநாடு நிறைவடைந்த பின்னர் பெரும் திரளானோர் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டதால் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது மாநாட்டில் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், அந்த மாநாட்டின்போது மயங்கி விழுந்த 90 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.