அம்பாறை டி. எஸ். சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறந்து விடப்பட்ட நிலையில் பெரும்போக வேளாண்மை செய்கை பாதிப்பு

9 hours ago



அம்பாறை டி. எஸ். சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறந்து விடப்பட்ட நிலையிலும் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாகவும் பெரும்போக வேளாண்மை செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப் போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் சில இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ் நிலங்களும் வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மற்றும் நாவிதன் வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சவளக்கடை கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2000 ஏக்கருக்கும் அதிகமாக நெற் செய்கை பண்ணப்பட்டுள்ளன.

இதேவேளை, சவளக்கடை, அன்னமலை, வேப்பயடி, 5ஆம் கொலனி போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்போது வேளாண்மை 70 நாட்கள் பயிராக காணப்படுவதனால், குடலைப்பருவத்தில் இருந்து கதிர்பருவத்துக்கு மாறும் இவ்வேளையில் அதிகரித்த மழை வீழ்ச்சி மற்றும் குளங்களிலிருந்தும் நீர் திறந்து விடப்பட்டுள்ளதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறினர். இந்த நிலையில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள் ளத்தால் தாம் பாதிக்கப்பட்டு மீண்டௌ முடியாத நிலையில் இருக்கும் வேளையில் இவ்வ ருட ஆரம்பத்திலேயே அடுத்த வெள்ளமும் தம்மை அதிகம் பாதித்துள்ளதாகவும் விவசா யிகள் வேதனை வெளியிட்டுள் ளனர்.


நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னும் நிர்ணயிக் காத நிலையில் தாம் எதிர் பார்த்த விளைச்சலை பெறு வதிலும் சிக்கல் நிலவுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட் டுள்ளனர்.


எனவே, பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு அர சாங்கம் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். (T)