சுய நிர்ணய உரிமை என்றால் என்ன? இதனை எப்படி பாவிப்பது? என்பதை பற்றி சுமந்திரனின் எடுபிடியாக செயற்படும் சாணக்கியனிடம் கேட்க விரும்புகிறேன். - சிவாஜிலிங்கம் கேள்வி.

4 months ago


சுய நிர்ணய உரிமை என்றால் என்ன? சுய நிர்ணய உரிமையை எப்படி பாவிப்பது? என்பதை பற்றி சுமந்திரனின் எடுபிடியாக செயற்படும் சாணக்கியனிடம் கேட்க விரும்புகிறேன் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் தங்களது தலைவிதி எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பதே பொதுமக்கள் வாக்கெடுப்பு.

சாணக்கியனுக்கு தற்போது 60 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதை விட மேலாலும் கீழாலும் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் ஆரம்பிக்கும் போது இவர்களால் முடியாது என்று கூறப்பட்டது.

முப்படைகளையும் கொண்டு வந்து, ஒரு நடைமுறை அரசாங்கத்தை கட்டி எழுப்பி, இன்று சர்வதேச ரீதியில் கொண்டுவரக் கூடிய அளவிற்கு போராட்டம் வளர்ந்தது.

அதுபோலத்தான் ஆரம்பத்தில் முடியாது என்று தான் எல்லாரும் சொல்லுவார்கள். அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் சரி வராது.

இனப்படுகொலை இடம்பெற்றது, சர்வதேச நீதி வேண்டும் என்ற கோரிக்கையை இன்று எத்தனையோ நாட்டு பிரதமர்கள் பேசும் அளவிற்கு வந்திருக்கின்றார்கள்.

அமெரிக்கா காங்கிரஸிலேயே ஒரு சுதந்திரத்துக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு வேண்டும் என்று 10 பேருடன் ஒரு தீர்மானம் வந்திருக்கிறது. அந்தத் தீர்மானம் நிறைவேறும் என்பதற்கு அனுசரணையாகவும் சாதகமாகவும் செயல்பட வேண்டும்” என்றார்.

அண்மைய பதிவுகள்