மதுவரி திணைக்களம் பிரதான மதுபான நிறுவனங்களிடமிருந்து 7.9 பில்லியன் ரூபா வரியை இதுவரை அறவிடவில்லை.- பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

4 months ago


மதுவரி திணைக்களம் ரூபா 7.9 பில்லியன் வரி நிலுவையை இன்னும் அறவிடவில்லை! சம்பிக்க ரணவக்க சபையில் தகவல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்தி ரம் 1680 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொண்டுள்ளன. மதுவரி திணைக்களம் பிரதான மதுபான நிறுவனங்களிடமிருந்து 7.9 பில்லியன் ரூபா வரியை இதுவரை அறவிடவில்லை என பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது வழிவகைகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் அறிக்கையை சபைக்கு முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-


அரச வருவாயை ஈட்டிக் கொள்வதற்கு பல யோசனைகைள முன்வைத்துள்ளோம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகிய மூன்று அரச நிறுவனங்கள் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 1680.4 பில்லியன் ரூபாவை வருமான மாக ஈட்டியுள்ளன.


2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வரி விலக் களித்ததால் 978 பில்லியன் ரூபா இழக்கப்பட்ட தாக குறிப்பிடப்பட்டது.வரி செலுத்தாதவர்களின் 900 வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு


ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்ட 17 மில்லியன் பேருக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (டின் இலக்கம்) வழங்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க பரிந்துரைத்தோம். இதற்கமைய 5 மில்லியன் பேருக்கு டின் இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியாளர்களிடமிருந்து வரி அறவிடல் குறித்து சிக்கல் காணப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளை குழுவின் ஊடாக வழங்கியிருந்தோம். இதற்கமைய பிரதான தங்க இறக்குமதியாளர்களில் 17 பேரில் 6 பேர் வரி செலுத்தியுள்ளனர். அத்துடன் தண்டப்பணம் அறவிடல் ஊடாக சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டு மாத்திரம் 10 பில்லியன் ரூபாவை மேலதிகமாக திரட்டியுள்ளது.


மதுவரி திணைக்களம் அறவிட வேண்டிய 7.9 பில்லியன் ரூபா வரி இன்றும் நிலுவையில் உள்ளது. வரி செலுத்தாத பிரதான மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மதுவரி திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினோம்.


அனுமதிப் பத்திரத்தை இடை நிறுத்துவது குறித்து நிதியமைச்சு உரிய ஆலோசனைகளை வழங்காத காரணத்தால் உரிய தீர்மானத்தை எடுக்க முடியவில்லை என்று மதுவரித் திணைக் களம் குறிப்பிட்டுள்ளது - என்றார். (அ)