ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

3 months ago


ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், தற்போது புதிதாக ஜனாதிபதி செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி நந்திக சனத் குமநாயக்க இலங்கை சுங்கத்தின் ஒருமைப்பாடு அபிவிருத்தி ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

கலாநிதி நந்திக சனத் குமநாயக்க அபிவிருத்தி பொருளாதாரத்தில் (Phd) பட்டதாரி என்பதோடு களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஆவார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர், பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்