இரண்டாம் எலிசபெத்தின் ஆட்சி யின் எழுபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கனேடிய அர சாங்கம் தனது குடிமக்களில் தேர்ந் தெடுக்கப்பட்ட சிலருக்கு பிளாட்டினம் ஜூபிலி பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது.
கனடா மற்றும் கனேடிய நாடுகளுக்கு பல சேவைகளை செய்தவர்களை கனேடிய அரசாங்கம் கௌரவத்திற்காக தேர்வு செய்துள்ளது.
அந்தப் பதக்கத்தை இரண்டு கன டியத் தமிழர்களும் பெற்றுள்ளனர். கணேசன் சுகுமார், குலா செல்லத் துரை ஆகிய கனேடிய தமிழர்கள் இந்தப் பதக்கத்தை பெற்றனர்.
மொத்தம் 18 கனேடியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரத்தில் இவர்கள் இருவரும் அடங்குகின்றனர். இந்த முடிசூட்டு பதக்கம் மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் உரு வாக்கப்பட்ட கனேடிய அரசின் கௌரவமாகும். கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமன் இந்த அங்கீகாரத்தை ஆரம்பித்து வந்தார்.
கனடாவிற்கும், தமது மாகாணத் திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களை இந்த அங்கீகாரம் அடையாளப்படுத்துகிறது.