அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்றையதினம் (29-10-2024) கோலாகலமாக நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை மறுதினம் (31ம் திகதி) கொண்டாடப்பட உள்ளது.
இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.