குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம் எம்.பிக்களுக்கு வழங்க நடவடிக்கை

1 month ago



அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம் வழங்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது எனவும் மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த            நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



அண்மைய பதிவுகள்