யாழ் காங்கேசன்துறை மேற்கு, ஐயனார் ஆலய முன்றாம் நாள் மண்டலாபிஷேக பூசை இன்று (23) பக்திபூர்வமாக நடைபெற்றது.
யாழ் காங்கேசன்துறை மேற்கு, ஐயனார் ஆலய முன்றாம் நாள் மண்டலாபிஷேக பூசை இன்று (23) பக்திபூர்வமாக நடைபெற்றது.
யுத்தம் காரணமாக வலிகாமம் வடக்கு பகுதியில் வசித்து வந்த மக்கள் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறிச் சென்றனர்.
சுமார் 31 வருடங்களின் பின்னர் அப்பகுதி மக்களை மீள குடியமர அனுமதி வழங்கப்பட்ட நிலையில் , ஐயனார் ஆலயம் மீள அப்பகுதி மக்களால் புனரமைப்பு செய்யப்பட்டது.
புதிதாக பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகள் அமைக்கப்பட்டு புதுப் பொழிவுடன் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
இன்று முன்றாம் நாள் மண்டலாபிஷேக உற்சவம் விநாயக வழிபாட்டோடு ஆரம்பமாகி கருவரையில் வீற்றுயிருக்கும் ஜயனார்,உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விஷேட,அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று ஜயனார் வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளி வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த ஆலயத்தில் கடந்த 21.10.2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்று எதிர்வரும் 12 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது. .