இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவின் மருந்து ஊழல் உயிர்களை கொன்ற ஊழல்.
இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவின் மருந்து ஊழல் உயிர்களை கொன்ற ஊழல்.
NDB, SLT, Aitekan Spence , Hemas Holding போன்ற நிறுவனங்களின் 2022ம் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட ரூ100 மில்லியன்கள். பத்துக் கோடிகள்.
அந்த பணத்தை இந்த கம்பெனிகள் உழைக்க எத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கும்? எத்தனை ஆயிரம் பேரின் வியர்வை சிந்தப்பட்டிருக்கும்? ஆனால் அதே தொகையை சொளையாக 45நாட்களில் ஒரு சைனில் உழைத்த அமைச்சர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
அவர் வேறு யாருமல்ல, தனது நாட்டு மக்களின் தேக ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டிய சுகாதார அமைச்சர்.
உயிரை காக்க வேண்டிய காப்பாளர் மக்களையே பகடைக் காய்களாக வைத்து, பல்லாயிரம் உயிர்களை கொலை செய்து அந்த தொகையை உழைத்திருக்கிறார்.
வாக்களித்த பொது மக்களின் உயிர்களை ஒரு பொருட்டாக கருதாமல் இந்த டீலை செய்திருக்கிறார்.வெட்கமாக இருக்கிறது.
எழுதும் போது எனது மனம் விம்மியழுகிறது.
2200 வெற்று போத்தல்களில், போத்தலில் 50ml தண்ணீரை நிரப்பி, அதற்கு Rituximab 500mg/50ml injection பெயர் பொறித்த ஸ்டிக்கரை ஒட்டி, அதை தனக்கு கீழ் இருந்த சுகாதார அமைச்சுக்கே விற்பனை செய்து தனது கைங்கரியத்தை நிறைவேற்றி இருக்கிறார் சேவைச் செம்மல். ஏழைகளின் தோழன். நாட்டுப்பற்றாளன்.
ரிட்டுக்ஸிமப் RITUXIMAB, பளவிசுமப் PALAVIZUMAB ; இந்த பெயர்களை முதன் முதலில் நான் கேள்விப்பட்ட போது நாலாம் வருட மருத்துவ பீடத்தில் கல்வி கற்று கொண்டுருந்தேன்.அவைகள் அப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள்.
மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் இயல்பு கொண்ட மிகவும் பவர் புள்ளான மருந்துகள் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
அந்த மருந்துகள் தான் இப்போது தீராத நோய்களை குணப்படுத்தும், அதுவும் புற்றுநோய் போன்ற நோய்களை குணப்படுத்தும் வைத்தியர்களின் கடைசி பிரம்மாஸ்திரமாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று வரை, எல்லா நாடுகளிலும் இந்த ரிடுக்ஸிமப் மருந்தை பாவிப்பதற்கு வைத்திய நிபுணர் பரிந்துரை கட்டாயம்.
அதுவும் அதை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்ட வைத்தியர் மட்டுமே பரிந்துரைக்க, பாவிக்க முடியும்.
ஏனெனில், இந்த மருந்தை மனித உடலில் பாவிப்பது, நாலு பக்கமும் பம்ப் உள்ள பெற்றோல் செட் நடுவில் நெருப்போடு விளையாடுவது போன்றது. அவ்வளவு ஆபத்தான மருந்து இது.
ஆனால் அதை சரியான முறையில் பாவித்தால் உயிர் காக்கும் மருந்து. ஒரு மருந்து குப்பியின் விலை நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சங்கள் தேறும்.
இப்படியான ஒரு உயிர் காக்கும் மருந்தோடு விளையாடி இருக்கிறார் முன்னாள் சுகாதார அமைச்சர்.
அவசரமாக மருந்து தேவை என்று வழமையான அரச Procurement, விலைமனு கோரல் நடவடிக்கைகளை எல்லாம் முற்றாக புறம் தள்ளி, தேசிய ஔடதங்கள் அதிகார சபையின் NMRA எதிர்ப்பையும் மீறி, தன்னுடைய அமைச்சு செல்வாக்கை பயன்படுத்தி, தன்னோடு கூட இருந்த ஊழல் பேர்வழிகளான ஒரு சில அதிகாரிகளையும் சேர்த்து, 'Isolez Biotech Pharma' என்ற பெயரில் போலி, டுபாக்கூர் கம்பனியை உருவாக்கி, அதனிடம் இருந்து இந்த மருந்துகளை வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்வது போல் டொகுமண்ட் தயார் பண்ணி, காரியத்தை கச்சிதமாக முடித்திருக்கிறார் திருவாளர் ரம்புக்வெல்ல.
இது நடந்து கொண்டிருக்கும் போது இலங்கை மக்கள் பாவம், கேஸூக்கும் பெற்றோலுக்கும் போலினிலே நின்று அடிபுடி பட்டுக் கொண்டிருந்தார்கள்.
டாலர் விலை 350 தாண்டி போய்க் கொண்டிருந்தது. (களவு செய்வதற்கு இவ்வளவு ப்ளான் பண்ண தெரிந்த இந்த மூளையில் கொஞ்சத்தை நாட்டை அபிவிருத்தி செயவதற்கு பாவித்து இருந்தால் நாடு எங்கேயோ போயிருக்கும் நீங்கள் நினைப்பது எனக்கும் விளங்குகிறது தோழர்களே!!)
இலங்கையின் பல்வேறு வைத்தியசாலைகளில் அதீதீவிர சிகிச்சை பிரிவில், கென்சர் வாட்களில் பாவிக்கப்பட்ட ரிடுக்சிமப் மருந்து ஒழுங்காக வேலை செய்யவில்லை ஏன் என்று வைத்தியர்களுக்கு சந்தேகம் வரவே பூதம் வெளியே வந்திருக்கிறது.
பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மருந்து மாதிரிகளில் "மருந்துக்கு கூட ரிடுக்ஸிமப் இல்லை" என்று அறிக்கை வந்திருக்கிறது.
அது மருந்து இல்லை ரம்புக்வெல்ல கிணற்று தண்ணீர் தான் என்று ரிப்போர்ட் வரவே சுகாதார சங்கங்கள் உசாராகின.
வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கின. அப்போது, டூ லேட் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மருந்து போத்தல்களில் 2000 பாவித்து முடிக்கப்பட்டு இருந்தன.
அத்துடன் நாட்டில் 19,000 புற்றுநோய் மரணங்களும் சம்பவித்திருந்தன.
இந்த கேசில், நுனியைப் பிடித்து , வாலைப்பிடித்து விசாரணை செய்து கொண்டு போன போது தான், முதளை வெளியே வந்தது.
இதே பெயரில் இதே கம்பனி இதற்கு முதலும் போலியான ஹியூமன் இம்யூனோகுளோபுலின் Human Immunoglobulin இன்னும் ஒரு வகை உயிர் காப்பு மருந்துகளை அரச வைத்தியசாலைகளுக்கு சப்ளை செய்திருப்தும் தெரிய வந்தது.
என்ன பாவம் செய்தார்கள் இலங்கை மக்கள்?
சுகாதார சங்கங்கள், வைத்தியர்கள், சிவில் அமைப்புகளிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக, அரசியல் என்ற பெயரில் சொந்த மக்களின் உயிர்களோடு விளையாடிய அமைச்சருக்கு எதிராக கடைசியில் பாராளுமன்றத்தில் கண்துடைப்புக்காக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது எல்லா கள்வர்களும் ஒன்றுசேர்ந்து அதை தோற்கடித்து கொலைகார அமைச்சரை காப்பாற்றிய விநோதம் இந்த நாட்டில் அப்போது நடந்தேறியது.
அதற்கு முஸ்லிம் பெயர் தாங்கி அரசியல் வாதிகளும் தாங்களும் விதிவிலக்கு இல்லை என்று தங்களையும் உயர்த்தி ,சாரணையும் மடித்து உயர்த்தி அந்த பிரேரணையை தோற்கடித்திருந்தார்கள் என்பது தனிக் கதை.
இப்போது சொல்லுங்கள் இவ்வளவு களவும் பொய்யும் செய்ய தெரிந்தவர்கள் மீண்டும் பாராளுமன்றம் போக வேண்டுமா? இல்லையா ? இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்ய வேண்டுமா ? இல்லையா? இப்போது தீர்மானம் உங்கள் கையில். வருகின்ற தேர்தலில் மீண்டும் நீங்கள் யாரை பாராளுமன்றம் அனுப்ப போகிறீர்கள்?
Dr Arshath Ahamed