விளாடிமிர் புடினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று ரஷ்யப் புலனாய்வு இதழியல் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

4 months ago


விளாடிமிர் புடினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று ரஷ்யப் புலனாய்வு இதழியல் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புடின் தனது இரண்டு மகன்களையும் பல ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்துள்ளார் என்றும், அவர்களின் இருப்பு பாதுகாக்கப்பட்ட அரசு இரகசியமாகக் கருதப்படுகின்றது எனவும் அந்தப் புலனாய்வு இதழியல் தளம் குறிப்பிட் டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட் வீராங்கனையான அலினா கபேவாவுக்கும் புடினுக்கும் பிறந்த இரண்டு இரகசிய மகன்கள் உள் ளனர். இவான் என்ற பெயரில் 9 வயதில் ஒரு மகனும், 5 வயதில் விளாடிமிர் ஜூனியரும் ஆடம்பரமான தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோரை பின்னிரவு மட்டுமே பார்க்கிறார்கள்.

உறவினர்களுக்கு மட்டுமே தெரியும். இருவர் பிறப்பின்போதும் உடனிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் கடந் தாண்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

மொஸ்கோவின் வடமேற்கில் உள்ள வால் டாய் ஏரிக்கு அருகே பாதுகாக்கப்பட்ட மாளிகையில், கிரெம்ளினின் பெடரல் பாதுகாப்புச் சேவையின் பாதுகாப்பில் அவர்கள் உள்ளனர். மாளிகையில் பணியமர்த்தப்பட்ட பயிற் சியாளர்களால் கற்பிக்கப்படுகிறார்கள்.

புடினின் மகன்கள் அரசின் தரவுத்தளங்களில் பட்டியலிடப்படவில்லை. பொதுவாக உளவாளிகள் மற்றும் அரசாங்கப் பாதுகாப்பு கொண்ட நபர்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு ஆவணங்கள், புடினின் மகன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்