உக்ரைனுக்கு எரிசக்தி உபகரணங்களை வழங்குவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
7 months ago

உக்ரைன் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது சீண்டிப் பார்க்கும் செயல் என்றும் உக்ரைனுக்கு எரிசக்தி உபகர ணங்களை வழங்குவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “உக்ரைன் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது சீண்டிப் பார்க்கும் செயல்.
நான் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு தளவாடங்களை அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்கவுள்ளேன். மேலும், உக்ரைன் அதன் எரிசக்தி உட்கட்டமைப்புகளை சரிசெய்வதற்கும், தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவை சீரமைக்கவும் உக்ரைனுக்கு எரி சக்தி உபகரணங்களை வழங்கு வோம்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நடக்கும் போர் மீண்டும் உக்கிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
