கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக தங்கியிருந்தவர் உயிரிழந்தார்.

5 months ago


கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தங்கியிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 நேற்று (15) இரவு கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுடைய ஒல்லியான உடலும் 05 அடி 04 அங்குல உயரமும் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் இறுதியாக அரை கை சட்டை மற்றும் சிவப்பு நிற சாரம் அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அயகம, எருபொறுவ பிரதேசத்தில் தலையில் காயங்களுடன் அயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அயகம, உஸ்வத்த, எருபொருவ பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மகன் விகாரைக்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்