சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழில் நடைபவணி இன்று (15) இடம்பெற்றது.

2 months ago



சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபவணி இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.

"விழியிலார்க்கு வழிகாட்டுவோம் வெள்ளைப் பிரம்புக்கு மதிப்பளிப்போம்" எனும் தொனிப்பொருளில் இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த நடைபவணி இடம்பெற்றது.

யாழ்.வெலிங்டன் சந்தியில் இருந்து ஆரம்பமான நடைபவணி மத்திய பேருந்து நிலையம் வரை முன்னெடுக்கப்பட்டது.

பேரணியில், இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் உறுப்பினர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அண்மைய பதிவுகள்