தனது இனத்து பெண்ணையும் விட்டுவைக்காத சிங்களப் படையினர் தமிழ் பெண்களை விட்டு வைத்திருப்பார்களா?
இறுதிப்போரில் தமிழ்ப்பெண்கள் இராணுவத்தால் பாலியல் குற்றம் புரிவதற்கு முன்பு தெற்கில் ஒரு சிங்கள யுவதிக்கு ஏற்பட்டதை இன்றும் மறக்கமுடியாது. இதனைநேரில் கண்டவர்கள் பலர் இன்றும் வாழ்கின்றனர்.
50 வருடங்களுக்கு முன்பு இராணுவத்தினரால் நிர்வாணமாக படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கதிர்காமம் அழகுராணி பிரேமாவதி மன்னம்பெரி என்ற 22 வயது சிங்கள யுவதியின் உடல் புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட தினம் (1971 மே 24).
ஜே.வி.பியின் ஆயுதப்போராட்டம் 1971 ஏப்ரல் 5இல் ஆரம்பமான காலம்.
கதிர்காமம் பொலிஸ் நிலையம் இரு தடவைகள் தாக்கப்பட்டதால் ஜே.வி.பியுடன் தொடர்பான சில சிங்கள இளைஞர்களும்,யுவதிகளும் ஏப்ரல் 16 கைதானபோது பிரேமாவதியும் கைதாகி இராணுவ முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாள்.
பிரேமாவதியை இரவு முழுவதும் லெப்ரின்ற்அல்பிறட் விஜேசூரிய பாலியல் துன்புறுத்தல் விசாரணை செய்தார்.
பெற்றோர் பார்க்க வந்தபோது அவளை நிர்வாணமாக பார்த்தனர்.
அவள் கைகளால் உடலை மறைத்தாள். 17 ஆம் திகதி காலை பிரேமாவதியை ஆடைகளின்றி முழு நிர்வாண உடலை சகலரும் காணும்படி அவள் கைகளை மேலே தூக்கியபடி பிரதான வீதியூடாக இராணுவத்தினர் அடித்து வந்த காட்சியை நேரில் கண்டவர்கள் இன்றும் உள்ளனர்.
ஒரு சிங்களப்பெண்ணுக்கு அதுவும் பட்டப்பகலில் இந்தக்கொடுமை என்றால், வடக்கு கிழக்கில் கைதான தமிழ்ப்பெண்களுக்கு என்ன நடந்திருக்கும்?
உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ ஆட்சியில் இடம்பெற்றது. மகள் சந்திரிக்கா ஆட்சியில் கிருசாந்தி,தாய்க்கு நடந்தது
கதிர்காமம்-தபாற் கந்தோர் அருகில் லெப்ரின்ற் விஜேசூரிய சுட்டார்.
ஆனால் அவள் இறக்கவில்லை,மீண்டும் ஒரு சிப்பாய் சுட்டும் இறக்கவில்லை. மூன்றாவது தடவையாக சுட்டு கொல்லப்பட்டாள்!.
பிரேமாவதியும் இறக்கும் இறுதிநேரம் தண்ணீர்! தண்ணீர்! என்றாள்.யாருமே கொடுக்கக்கூடாது என்றார் லெப்.விஜேசூரிய.
அவளது நினைவாக நூல்கள்,பத்திரிகைகளில் கட்டுரைகள்,சிங்கள திரைப்படம்சிங்கள பாடல்கள் வெளிவந்தன.
1977 தேர்தலில் ஜே.ஆர்.இதனை சிறிமாவோ ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்தார்..
போர்க்குற்றம் செய்யவில்லை! கூறுபவர்கள் இறந்த உறவுகளுக்கு தமிழர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தடை! பிரேமாவதிக்கு ஆண்டுதோறும் அஞ்சலி!
கதிர்காமம் புனித நகரில் பிரேமாவதி மன்னம்பெரியின் சிங்களத்தில் எழுதிய நினைவுக்கல் நிர்வாணமாக படையினர் கொண்டுவருவதை ,புதைகுழியில் இருந்து நிர்வாணகோலத்தில் தனது காது தோடுகளை கழற்றி கொடுப்பதை செதுக்கிய நினைவுக்கல் (தூபி) இன்றும் காணப்படுகிறது.