வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மத்திய மாகாணங்களில் இன்று மழை.-- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

3 months ago



வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதற்கமைய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்வதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

அண்மைய பதிவுகள்