காஸாவில் ICRC மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 25 இற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
காஸாவில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள கூடார முகாம் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 25 இற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டு தடவைகள் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதலில் தனது கணவரை இழந்த பெண் கூறினார்.
முதல் தாக்குதலை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது. வெளிச்சம் வெளிவந்தது இதனைத் தொடர்ந்து என்ன நடக்கின்றது எனப் பார்ப்பதற்காக ஏனையவர்கள் சென்றவேளை இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றது.
நாங்கள் முகாம்களுக்குள் இருந்தோம் அவ்வேளை அவர்கள் செஞ்சிலுவை சங்கத்துக்கு அருகில் உள்ள கூடாரங்கள் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
அப்போது, எனது கணவர் வெளியே சென்றார் என கான்யூனிஸ் மருத் துவமனைக்கு அருகில் வைத்து அந்தப் பெண் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர்கள் இரண்டாவது தாக்குதலை மேற்கொண்டனர். செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலக வாயிலுக்கு அருகில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என்றும் அந்தப் பெண் குறிப்பிட்டார்.
முதல் தாக்குதல் காரணமாக பதற்றமடைந்த மக்களுக்கு உதவிக்கொண்டிருந்த தனது இரண்டு மகன்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என ஹசான் அல் நஜாய் தெரிவித்தார்.
பெண்களும் குழந்தைகளும் அலறியதைத் தொடர்ந்து எனது மகன்கள் அவர்களைக் காப்பாற்ற விரைந்தனர் எனவும் அவர் கூறினார்