அமெரிக்க இராஜாங்க திணைக்கள உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர், இலங்கைக்கு விஜயம்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர், அபி பின்கெனவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நேற்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அபி பின்கெனவர் இலங்கை மற்றும் நேபாளத் திற்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்.
அபி பின்கெனவரின் விஜயமானது, தெற்காசிய இளையோர் தலைவர்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை உணர்த்துவதோடு, குடியுரிமை பங்கேற்பு மற்றும் இளையோரின் தலைமைத்துவம், கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் சமூக நெகிழ்வுத் தன்மை போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்த ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
இலங்கையில், அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கையின் கூட்டுறவின் மூலம் கல்வி, தலைமைத்துவம் மற்றும் குடியுரிமை பங்கேற்பு போன்றதுறைகளில் இளம் தலைவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களின் தாக்கத்தை சிறப்பு தூதர் பின்கெனவர் இந்த விஜயந்தின் போது அவதானிப்பார்.