இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளிவந்துவிட்டன. புதிய பாராளுமன்றில் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறை பாராளுமன்றம் செல்கிறார்கள்!
இது பாராளுமன்றில் 12 வீத பிரதிநிதித்துவம் என்பது குறிப்பிடத் தக்கது.
10 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இவர்கள் செல்கிறார்கள்.
வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 19 அங்கத்தவர்கள் செல்கிறார்கள்.
கொழும்பில் நேரடித் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது துர்ப்பாக்கியமானது என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தில் மனோகணேசனை பாராளுமன்றம் அனுப்பும் என்று நம்பப்படுகின்றது.
தமிழ் பிரதிநிதிகளில் அதிக விருப்பு வாக்கு பெற்றவர் திருமதி சரோஜா போல்ராஜ் அவர்கள் மாத்தறை மாவட்டத்தில் 148379 வாக்குகளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம்
1. சிவஞானம் சிறீதரன் - தமிழ் அரசு கட்சி
2. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
3. இராமநாதன் அருச்சுனா சுயேச்சை
4. இளங்குமரன் - தே.ம.ச.
5. சிறி.பவானந்தராஜா - தே.ம.க.
6. ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தே.மக வன்னி
முல்லைத்தீவு
7. துரைராசா ரவிகரன் - தமிழ் அரசு கட்சி
8. செல்வம் அடைக்கலநாதன் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
9.செல்வத்தம்பி திலகநாதன் - தே.ம.க
10.ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் தே.ம.ச.
திருகோணமலை
11. சண்முகம் குகதாசன் - தமிழ் அரசு கட்சி
மட்டக்களப்பு
12. அருண் ஹேமச்சந்திரா - தே.ம.க.
13. இராசமாணிக்கம் சாணக்கியன் - தமிழ் அரசு கட்சி
14. ஞானமுத்து சிறிநேசன் தமிழ் அரசு கட்சி
14. இளையதம்பி சிறிநாத் - தமிழ் அரசு கட்சி
16. கந்தசாமி பிரபு தே.ம.ச.
அம்பாறை
17.சுவீந்திரன் கோடீஸ்வரன் - தமிழ் அரசு கட்சி
நுவெரெலியா
18. பழனி திகாம்பரம் -ஐ.ம.ச.
19. வேலுச்சாமி ராதாகிருஷ்னன் -ஐ.ம.ச.
20. கிருஸ்னன் கலைச்செல்வி தே.ம.ச.
21. ஜீவன் தொண்டமான் - தே.ம..
22. கிட்டினன் செல்வராஜ் - தே.ம.க 23. அம்பிகா சாமுவேல் தே.ம.ச.
இரத்திரபுரி
24.எஸ். பிரதீப் - தே.ம.க.
மாத்தறை
25. சரோஜா போல்ராஜ்- தேமச
தேசியப் பட்டியல்
26. இராமலிங்கம் சந்திரசேகரன் (யாழ்ப்பாணம்) தே.ம.ச.
27. தமிழ் அரசு கட்சி
28. ஐக்கிய மக்கள் சக்தி - மனோ கணேசன் "(கொழும்பு) - இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.