கனடாவில் சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது

4 hours ago



கனடாவில் சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு ஆள்களை கடத்த முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் நுட்பமான முறையில் நபர்களை மறைத்து அமெரிக்காவிற்குள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் கொர்ன்வெல் பகுதியில் வாகனம் சோதனையிடப்பட்ட போது இந்த சட்டவிரோத ஆள்கடத்தல் முயற்சி அம்பலமாகியுள்ளது.

வாகனத்தன் பின்புறத்தில் மறைத்து அழைத்துச் செல்லப்பட்ட எட்டு பேரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வாகனத்தின் சாரதி மற்றும் சக பயணி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

58 வயதான கிறிஸ் எட்வர்ட், 54 வயதான ஜோர்ஜ்டுகர், 52 நோகொக்டுங் லீ மற்றும் 43 வயதான ஹூ ஹூவான் நுகாயன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆள்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக இவ்வாறான சோதனைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அமெரிக்காவிற்கும் கனடா விற்கும் இடையில் முரண்பாட்டு நிலை நீடித்து வரும் நிலையில், இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.