அமெரிக்கா உணவு பொருள்களை புறக்கணிக்குமாறு கனடிய நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 months ago



அமெரிக்கா உணவு பொருள்களை புறக்கணிக்குமாறு கனடிய நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்கா அரசாங்கம் கனடிய ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடிய நுகர்வோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அமெரிக்கா உணவு பொருள்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு தடவைக்கு இரண்டு தடவை அவற்றை கொள்வனவு செய்வது குறித்து யோசிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு உணவு பண்டங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு அவற்றை புறக்கணிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் முதலாக திகதி தொடக்கம் கனடிய ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

எவ்வாறெனினும், அமெரிக்க உற்பத்திகளை அடையாளம் கண்டு அவற்றை புறக்கணிப்பது என்பது பல்வேறு நடைமுறை சிக்கல்களை கொண்ட செயல்முறை என துறை சார்ந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.