இலங்கையில் மீனவர்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு.-- கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி. ரத்னகமகே உறுதி

4 months ago



இலங்கையில் மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு பெற்றுக்            கொடுக்கப்படும் என கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி. ரத்னகமகே உறுதியளித்துள்ளார்.

திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட கடல்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே அப்பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலின் போதே மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளுக்கு தீர்வினை அரசாங்கத்தினூடாக பெற்றுக் கொடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இதன்போது விநாயகபுரம்      மீனவர்களினால் மகஜர் ஒன்றும் கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி.ரத்னகமகேவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.