முல்லைத்தீவில் கிணற்றுக்குள் இருந்து 992 தோட்டாக்கள் மீட்பு

6 months ago

முல்லைத்தீவு பிரதேசத்தில், கிணற்றுக்குள் இருந்து 992 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிணற்றைச் சுத்தம் செய்வதற்கு உரிமையாளர் தயாரானபோது, கிணற்றுக்குள் தகரப்பெட்டியொன்று காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்தப் பெட்டியை மீட்டுள்ளனர்.

அதற்குள் விமான எதிர்ப்புத் தோட்டாக்கள் இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.