யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

3 months ago


யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரைச் சேர்ந்த 74 வயதுடையவரே காணாமல் போயுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து கடற்றொழிலுக்காக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை சென்றவர் மாலை வரை வீடு திரும்பாத நிலையில் வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.