ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

6 months ago

யாழ்.அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

வீட்டின் மீது பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் வீட்டின் முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ எரிந்ததுடன் வீட்டின் முன் பக்கம் இருந்த பொருள்களும் எரிந்துள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நடத்தப்பட்டது.

"திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



அண்மைய பதிவுகள்