கடலரிப்பு காரணமாக பருத்தித்துறை கடற்கரை வீதியில் இரண்டு இடங்கள் தாழிறங்கி காணப்படுகின்றன.

1 month ago



கடலரிப்பு காரணமாக பருத்தித்துறை கடற்கரை வீதியில் இரண்டு இடங்கள் தாழிறங்கி காணப்படுகின்றன.

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நாட்டில் பலத்த கன மழை பெய்து வரும் நிலையில், பருத்தித்துறை கடற்கரை வீதியில் துறைமுகத்துக்கு அருகாமையில் உள்ள பகுதியும், சாக்கோட்டை சவேரியார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதியும் தாழிறங்கி காணப்படுகின்றன.

இந்நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலையில் தாழிறங்கிய பகுதி அரிப்பு ஏற்பட்டு மேலும் வீதி இடிந்து விழும் நிலை காணப்படுகிறது.

இவ் வீதி ஊடான போக்குவரத்து தற்போதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.