இலங்கை பொருளாதார மீட்பு, நல்லாட்சியை முன்னேற்ற தவறியது - வெரிட்டே நிறுவனத்தின் ஐ.எம்.எப். கண்காணிப்பாளர் அறிக்கை
சர்வதேச நாணயநிதியம், இலங்கைக்கான மூன்றாவது நிதிக்கொடுப்பனவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளபோதும், இலங்கை தனது பொருளாதார மீட்புக்கான அடிப்படை நல்லாட்சியை முன்னேற்றத் தவறியுள்ளது என்று வெரிட்டே நிறுவனத்தின் ஐ.எம்.எப். கண்காணிப்பாளர் அறிக்கை கூறுகின்றது.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின்படி முடிக்கப்படவேண்டிய 63 வாக்குறுதிகளில் 32 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டும், 16 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலும், 15 வாக்குறுதிகள் அறியப்படாமலும் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின்படி 25 வீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எம்.எப். திட்டத்தால் பொருளாதார நெருக்கடியின் மூல காரணங்களாக கண்டறியப்பட்ட நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு என்பவற்றை இலங்கை நிறைவேற்றவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது