ரணில் ஆட்சியில் அவரது கடிதத் தலைப்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட முறைகேடான உத்தரவு குறித்து விசாரணை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்தபோது, அவரது கடிதத் தலைப்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஜனாதிபதிக்கான கடிதத் தலைப்பில் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் விசேட உத்தரவு என்ற தலைப்பில் ஒரு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் தென்மாகாணத்தில் மோசடி செயற்பாடுகளை மேற்கொள்ளும் வர்த்தகர் ஒருவருக்கு அவரது மோசடி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல இடையூறு விளைவிக்க வேண்டாம் என்ற வாறான முறைகேடான உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அது மாத்தறை தபால் அலுவலகத்தில் இருந்து தபால் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கடிதம் போலியானதாக இருக்கலாம் என்ற ஊகத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
அதன் பிரகாரம் தற்போதைக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
