வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் பணம் கொடுத்தால் கடவுச்சீட்டைப் பெறலாம் என்கின்ற நிலைமை காணப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு

2 months ago



வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் பணம்            கொடுத்தால் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற ஒரு நிலைமை காணப்படுவதோடு இங்கு ஊழல் நிறைந்து            காணப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதில் தாம் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்த மக்கள், இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில், "தூர இடங்களில் இருந்து அதிகாலை 3 மணிக்கு வரிசையில் நின்று கடவுச்சீட்டை பெறுவதற்கு முயற்சி செய்த    போதிலும் 25 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டை வழங்குவோம் எனத் தெரிவித்து ஏனையோரை செல்லுமாறு கூறினர்.

தூர இடங்களில் இருந்து குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணத்தில் இருந்தும் கடவுச்சீட்டை பெறுவதற்காக வருகை தந்த தாம் இவ்வாறு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதேவேளை, கடவுச்சீட்டு அலுவலகத்தில் பணியாற்றுவோர் தமக்குத் தெரிந்தவர்களை உள்ளே அழைத்து அவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குகின்ற செயல்பாடும் இடம்பெறுவதோடு பணம் கொடுத்தால் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற ஒரு நிலைமையும் காணப்படுகின்றது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பதவியேற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இது தொடர்பில் கவனம் செலுத்தி, வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடம்பெறும் ஊழல் மோசடியை நிறுத்த வேண்டும்.

மக்கள் இலகுவாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என கோரிக்கை விடுத்தனர்.



அண்மைய பதிவுகள்