சீன அரிசி கொழும்பில் இருந்து எடுத்து வரப்பட்டு விநியோகிக்க நடவடிக்கை

6 months ago

சீன அரசின் அரிசி வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் கொழும்பில் இருந்து எடுத்து வரப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான சீனாவின் அடுத்த கட்ட உதவியே இந்த அரசி விநியோகம் எனப்படுகின்றது. இந்த விநியோகத்துக்காக 10 கிலோ எடை கொண்ட பொதிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 7 ஆயிரத்து 946 பொதிகளும், மன்னார் மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 604 பொதிகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 320 பொதிகளும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 940 பொதிகளும் கொழும்பில் இருந்து எடுத்து வரப்பட்ட பின்னர் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இதேநேரம் கிழக்கு மாகாணத்துக்கும் இந்தப் பொதிகள் எடுத்துச் செல்லப் பட்டவுள்ளன.

இம்முறை அரிசிப் பொதிகள் ஒவ்வொன்றும் 50 கிலோ எடை மூடைகளாகவே காணப்படுவதனால் அவற்றை சிறு பொதிகளாக்கி வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த அரிசிப் பொதிகள் விரைவில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் சீனப் பிரதிநிதிகளால் வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.