நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள் என்று ரஷ்யர்களுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவுரை.
3 months ago
நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள் என்று ரஷ்யர்களுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி விளாமிர் புடின் அறிவுரை வழங்கியுள்ளார்.
1990 களில் இருந்தே ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இது ஒருபக்கம் என்றால் போர் உள்ளிட்ட காரணங்களால் அந்த நாட்டில் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
“உக்ரைனுடன் நடந்து வரும் போர் காரணமாக ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்துக்கு பேரழிவு.
வேலையில் மூழ்கியிருப்பது சரியான காரணம் அல்ல. இனப்பெருக்கத்துக்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது.
வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் தேநீர் இடைவேளை யின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்"- இவ்வாறு புடின் கூறியுள்ளார்.