நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னும் 3 வருடங்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
4 months ago
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னும் 3 வருடங்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், ஜே. வி. பியினர் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மற்றும் வரிகளை இல்லாமல் செய்வதாகக் கூறுகின்றனர்.
எனக்கும் வரிகளை இல்லாமல் செய்வதற்கு விருப்பம் உள்ளது. எனினும், அவ்வாறு செய்தால் நாம் 2022ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துக்கே மீண்டும் சென்றுவிடுவோம். எனவே வேறு எவரிடமும் நாட்டை கையளிக்க வேண்டாம், அவ்வாறு செய்வதால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும். நாம் இருப்பதைப் பாதுகாத்து இன்னும் 3 வரு டங்களில் அனைத்து பிரச்சினை களுக்கும் தீர்வுகண்டு முன் னோக்கிச் செல்ல முடியும்- என்றார்.