இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சசிகலா ரவிராஜூம், ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவும் விலகுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் சசிகலாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று திங்கட்கிழமை வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சசிகலா ரவிராஜூக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அனைத்து பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்தும் தாம் விலகுகிறார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அறிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் அவர் துறந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில்,
தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போது அதில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் மற்றும் கொழும்பு வாழ் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நான் விண்ணப்பத்தை கொடுத்திருந்தேன்.
அதனை எந்தவொரு காரணமும் இல்லாமல் சுமந்திரன் நிராகரித்துள்ளார்.
சுமந்திரன் தான் சார்ந்த அணியை வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்து கட்சிக்காக தொடர்ச்சியாக பாடுபடுகின்ற மிக முக்கியமான திறமைசாலிகளை உள்ளெடுக்காததன் அடிப்படையிலும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்கு பொறுப்பு சொல்ல முடியாத கட்டத் தில் தான் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தவராசா குறிப்பிட்டுள்ளார்.