அரசாங்கம் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அசாங்கம் இந்த ஆண்டு ஜனவரி 3 ஆயிரத்து 380 பில்லியன் ரூபாவை உள்நாட்டுச் சந்தையில் கடனாகப் பெற்றுள்ளது.
மத்திய வங்கியின் பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
5 மாதங்களில் சுமார் 3 ஆயிரத்து 85 பில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் மூலமாகவும் 785 பில்லியயன் ரூபாவை திறைசேரி பத்திரங்கள் மூலமாகவும் அரசு கடனாகப் பெற்றுள்ளது.
சராசரியாக ஒரு மாதத்தில் பெறப்பட்ட உள்நாட்டுக்கடன் தொகை 775 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், ஒருநாளில் எடுக்கப்பட்ட சராசரி கடன் தொகை சுமார் 25 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.