பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை புறக்கணிக்கின்றனர்.

3 months ago


பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை புறக்கணிக்கின்றனர் என பவ்ரல் முறைப்பாடு செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கு முன்னதாக நாட்டில் பொலிஸ்மா அதிபரோ அல்லது பதில் பொலிஸ்மா அதிபரோ இல்லாதபோதிலும் பொலிஸார் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல், அதேவேளை சில அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவது குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது.

பதுளை, வவுனியாவின் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுகின்றனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலின்போது சட்ட ஒழுங்கை பேணுகின்றமைக்காக நாங்கள் பொலிஸாரை பாராட்டுகின்றோம்.

பொலிஸ்மா அதிபரோ, பதில் பொலிஸ்மா அதிபரோ இல்லாமல் அவர்கள் செயற்படுகின்றனர். தேர்தலுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகர் சட்டவிரோத சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றுவது குறித்து அக்கறை காட்ட வில்லை. தேர்தல் அதிகாரிகளின் உத்தரவுகளை அலட்சியம் செய்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.