கடலட்டைப் பண்ணைகளின் வரவு, கடல் வளங்களில் ஆக்கிரமிப்பு கடல் உணவு குறைந்து செல்கிறது. -யாழ்.கடற்றொழில் சமாச முன்னாள் தலைவர் சுட்டிக்காட்டு-
நாட்டில் தனிமனிதன் ஒருவருடத்தில் உட்கொள்ளும் கடல் உணவு குறைவடைந்து செல்லும் நிலை ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. கடலட்டைப் பண்ணைகளின் வரவு, கடல் வளங்களில் ஆக்கிரமிப்பு ஆகியவையே இதற்கு வழிகோலுகின்றது என்று யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிதிகளுக்கும் துறைசார்ந்த நிபுணர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரை யாடலில் அவர் இதனைத் தெரிவித் தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
2015 ஆம் ஆண்டு ஆய்வுகளின் பிரகாரம் ஒரு வருடத்தில் தனி மனிதன் ஒருவன் 31 கிலோ கடலு ணவை விலங்குப் புரதமாக உட் கொண்டிருக்கிறான்.
ஆனால், 2023 ஆம் ஆண்டு ஆய்வுகளின் பிரகாரம் தனி மனித னொருவன் ஒருவருடத்தில் 18 கிலோ கடலுணவை உட்கொண்டி ருப்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடலுணவு எமது சமூகத்திடையே குறைந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்ற நிலை யிலும் கடல் அட்டைப் பண்ணை களின் திடீர் வரவு மீன் இனங்களின் உற்பத்திக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
அத்துடன் கடலுணவுகள் வெளி நாடுகளுக்கு ஒருகிலோ மீன் 6 பொலருக்கு விற்பனை செய்யப்படு கிறது. எனவே பொருளாதார நிபு ணர்கள் இது தொடர்பில் ஆய்வு களை மேற்கொண்டு எதிர்காலத் தில் கடலுணவை உட்கொள்ளும் அளவை அதிகரிப்பதற்கு எவ்வா றான நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் என்பது தொடர் பில் தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.