யாழ்.இளவாலை தெற்கில் தவறணையொன்றில் கள்ளு அருந்தியவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்
14 hours ago
யாழ்ப்பாணம் இளவாலை தெற்கில் தவறணையொன்றில் கள்ளு அருந்தியவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழ்.சங்குவேலி தெற்கு, மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கவேலு (வயது- 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்புக் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.