மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு.
8 months ago


மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இன்று (29.07.2024) காலை 10.00 மணிக்கு புலனாய்வுத்துறை முன்னெடுக்கும் விசாரணைக்கு அமைய சமூகமளிக்குமாறு அவரிடம் கோரப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அமலநாயகி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது உரிமைக்காக போராடுவோரை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
