தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ். தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று கையளித்தனர்.
3 months ago
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று (07) கையளித்தனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம் பிற்பகல் 12.00 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.
இதன் பிரகாரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந் திறன், கனகரட்ணம் சுகாஸ், நடராஜர் காண்டீபன், வாசுகி சுதாகரன், ஜெகதீஸ்வரன், க.ஞானகுணேஸ்வரி, மேலிஸ் ஜின்சியா, எம்.நடனதேவன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.