தேசிய கடன் மறுசீரமைப்பு உழைக்கும் மக்களின் பாதிப்பை பேசாமல் ஜனாதிபதி இணக்கம்.-- கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு
தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஒரு வார்த்தையேனும் பேசாமல் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் அரசாங்கம் ஒரேநாளில் இவை அனைத்துக்கும் இணக்கம் தெரிவித்தமை கவலைக்குரியது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிக்கையில்
புதிய அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு நான் தயாராக இல்லை.
அவர்களுக்கு இன்னும் சிறிது காலம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், சில விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது.
தேசிய கடன் மறுசீரமைப்பின்போது வேலை செய்யும் மக்களுக்கும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
அநுரகுமார திஸநாயக்கவின் அரசாங்கம் ஒரே நாளில் இவை அனைத்துக்கும் இணக்கம் தெரிவித்தமை கவலைக்குரியது.
அத்தோடு இவர்கள் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பிலும் ஒரு வார்த்தையேனும் கூறவில்லை.
அடுத்த பாராளுமன்றத்தில் இதற்காக போராடுவேன்.
தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாகவே ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்பட்ட நட்டத்தை சரி செய்வதற்காக குரல் கொடுப்பேன்- என்றார்.