லண்டன் அபயம் நிதிப்பங்களிப்பில் கருவள சிகிச்சை நிலையத்துக்கு ஸ்கான் இயந்திரம்

5 months ago


மூன்றரைக் கோடி ரூபா செலவில் ஸ்கான் இயந்திரம் சிவபூமி அறக்கட்டளை ஏற்பாட்டில், லண்டன் அபயம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்படுகிறது.

யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் மருத்துவபீடம், சிவபூமி அறக் கட்டளையுடன் இணைந்து நடத்தும் பெண்கள் தொடர்பான கருவளச் சிகிச்சை நிலையத்துக்கு சுமார் 35 மில்லியன் ருபா செலவில் அல்ட்ராச வுண்ட் ஸ்கான் இயந்திரமொன்று கொள்வனவு செய்யப்பட்டு நாளை 17/7/2024 மாலை3.00மணிக்கு கலாநிதி ஆறு.திருமுருகன் அவர் களால் கையளிக்கப்படவுள்ளது.

லண்டன் 'அபயம்' அறக்கட்டளை யிடம் ஆறுதிருமுருகன் விடுத்த வேண்டுதலால் இக்கருவி கிடைத்துள்ளது. இக்கருவிக்கான முழுச்செலவையும் திரு.சதா.மங்களேஸ்வரன் சகோதரர்கள் 'அபயம்' ஊடாக வழங்கியுள்ளனர். மங்களேஸ்வரன் யாழ் இந்துக்கல்லூரியில் ஆறு.திருமுருகன் அவர்களோடு கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்