தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் பாசையூரில் உள்ள ஐம்பது குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாசையூர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கலந்து கொண்டு குறித்த குடும்பங்களுக்கு இவ் உதவித்திட்ட வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் முன்னாள் மாநகர பிரதி மேயர் துறைராஜா ஈசன்,முன்னாள் மாநகர வட்டார உறுப்பினர்கள், பாசையூர் சனசமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.