கனடா முன்னெப்போதும் இல்லாத வகையில் ரயில் சேவை முடக்கத்தின் விளிம்பை அடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கனடா முன்னெப்போதும் இல்லாத வகையில் ரயில் சேவை முடக்கத்தின் விளிம்பை அடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ரயில் சேவை முடக்கம் வரும் வியாழக்கிழமை தொடங்கும் என்று ரயில் சேவை நிறுவனங்கள் கூறுகின்றன. அதே சமயம் ரயில்வே தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி இருக்கின்றனர் என தொழிற்சங்கம் அறிவித்திருக்கின்றது.
ரயில்வே தொழிற்சங்கத் தொழி லாளர்களை வரும் வியாழக்கிழமை தொடக்கம் (வெளியில் விட்டு) பூட்டத் தொடங்கும் என்ற கதவடைப்புக்கான முன்னறிவித்தலை கனடாவின் இரண்டு முக்கிய ரயில் நிறுவனங்களில் ஒன்றான கனடியன் நேஷனல் ரயில்வே, கனடாவில் உள்ள தொழிலாளர் நல அமைப்பான டீம்ஸ்டர்ஸ் யூனியனுக்கு ஞாயிற்றுக்கிழமை முறைப்படி வழங்கியிருக்கின்றது. "தொழிலாளருடான முரண்பாட்டுக்கு உடனடி மற்றும் திட்டவட்டமான தீர்வு இல்லாவிட்டால், கனடியன் நஷனல் ரயில்வேக்கு அதன் வலையமைப்புப் பணிகளைக் கட்டம் கட்டமாகப் பணிநிறுத்தத்தை நோக்கி முன்நகர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை, இது முழுக் கதவடைப்பில் முடிவடையும்" என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"வார இறுதியில் பேச்சுவார்த்தைகள் இருந்த போதிலும், அர்த்தமுள்ள முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை, மேலும் தரப்புகள் முரண்பட்டு வெகு தொய்வு நிலையில் உள்ளன." என்று கூறப்பட்டது.
கனடாவின் மற்ற முக்கிய ரயில் இயக்க நிறுவனமான 'கனடியன் பசிபிக் கன்சாஸ் சிட்டி' வரும் வியாழன் தொடக்கத்தில் இருந்து உறுப்பினர்களுக்குக் கதவடைப்பைத் தொடங்கும் என்று டீம்ஸ்டர்ஸ் யூனியனிடம் ஏற்கனவே கூறியுள்ளது.
டீம்ஸ்டர்ஸ் யூனியனின் அந்தந்தத் தரப்புகளுக்கும் இடையில் கடைசி நிமிட தொழிலாளர் ஒப்பந்தங்ள் எதேனும் ஏற்பட்டாலே தவிர, கனடாவில் பெரும்பாலான ரயில் போக்குவரத்து வியாழன் வாக்கில் நிறுத்தப்படும் என்பதுதான்.
'கனடியன் பசிபிக் கன்சாஸ் சிட்டி' நிறுவனத்துக்கு டீம்ஸ்டர்ஸ் யூனியன் தரப்பினரும் தனித்தனியாக 72 மணிநேர வேலைநிறுத்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிட்டனர்.
"கடைசி நிமிட ஒப்பந்தங்களை தரப்புகளிடையே எட்டப்படாவிட் டால், ஓகஸ்ட் 22 வியாழன் அன்று 00:01 மணிக்கு வேலை நிறுத்தம் ஏற்படும்" என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இல்லை என நிறுவனங்களும் தொழிற் சங்கமும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டினர்.
கனடியன் நேஷனல் ரயில்வே நிறு வனம் மற்றும் கனடியன் பசிபிக் கன் சாஸ் சிட்டி நிறுவனம் ஆகியவை தொழிலாளர் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் சலுகைகளை கோருகின்றன என்று தொழிற்சங்கத்தினரான டீம்ஸ்டர்கள் தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் அதனை இரண்டு நிறுவனங்களும் மறுக்கின்றன.
கனடியன் நேஷனல் ரயில்வே நிறு வனம் மற்றும் கனடியன் பசிபிக் கன் சாஸ் சிட்டி நிறுவனம் ஆகிய இரண்டும் ரயில்வேயில் உள்ள 9,300 தொழிலாளர்களின் சாத்தியமான வேலை நிறுத்தங்களுக்குத் தயாராகும் வகையில் பேச்சுவார்த்தையில் நேர்மையான ஏற்றுமதிப் பணியை நிறுத்தியுள்ளன இதன் பொருள், நிறுவனங்களுக்கும் நம்பிக்கைத் தன்மையுடன் எதிர்த்தரப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.